கறுப்பர்களும்,சூலையும்

சூலை, வரலாற்றில் தமிழர்களின் கறுப்பு நாட்களை கொண்டது.. சூலைக்கு தமிழர்கள் மீது என்ன கோபமோ!வரலாற்றில் தமிழர்கள் தனக்கான நியாயமான உரிமைகளை கேட்டு போராடிய போது,இந்த மண்ணிற்கு உரிமையற்ற மாற்று இன மக்களால் தெரு நாய்கள் போல அடித்து,எரித்து கொல்லபட்டது சூலையில் தான்.. 23 ஜூலை 1983 அன்று புலிகளின் ஆரம்பகால முக்கிய தளபதியான சீலன் அவர்களின் இறப்பிற்கு பழிவாங்கும் விதமாக புலிகளால் இலங்கை இராணுவத்தினர் 13 கொல்லப்பட்டனர். அதற்கு எதிர்வினை ஆற்றுவதாக இலங்கை அரசின் சிங்கள இனவெரியர்களால் […]

Read More கறுப்பர்களும்,சூலையும்

நான் அச்சப்படுகிறேனா!!!

தமிழகத்தின் தலைநகரில் வடசென்னையில் வாழும் 27 வயது இளைஞன் நான். ஜனவரி மாதம் முதல் உலகில் இன்னொரு மூலையில் மக்கள் கொரோன என்ற கடுமையாக நோய் தொற்று ஏற்பட்டு இறக்கிறார்கள்,மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. நிறைய பேர் இறக்கிறார்கள் என்று செய்தி உல வந்து கொண்டு இருந்த போது அதை பற்றி துளியும் கவலை இல்லாது, எனக்கு அந்த நோய்க்கும் எந்த சம்மந்தம்,என் ஊருக்கு அந்த வியாதி எல்லாம் வராது என்ற திமிரிலும் சுற்றி கொண்டு இருந்தேன். மார்ச் […]

Read More நான் அச்சப்படுகிறேனா!!!

“இறைவி” மனிதத்தின் தேவை

நம் அனைவரும் இறைவிகளை சுற்றி தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.சொல்ல போனால்இறைவிகளால் தான் நிம்மதியாக சுற்றிக்கொண்டு வாழ்கிறோம். அது தாயகவோ,தாரமாகவோ,சகோதரியாகவோ, நண்பியாகவோ, சித்தியோ, அத்தையோ,பாட்டியோ இப்படி பல உறவு முறைகளில் அவர்களே நம்மை வழிநடத்தி வாழ வைத்து கொண்டு இருக்கிறார்கள். இன்று மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் இன்று ஒரு நாள் மட்டும் அவர்களை வாழ்த்துவதும், புகழ்வதும் சரியா!(என்னையும் சேர்த்துதான்). உலகில் பெண்களை போற்றியும்,வாழ்த்தியும் நிறைய கதைகளும்,கவிதைகளும் உண்டு.ஆனால் தமிழ் பெண்களை போற்றியது போல ஏதும் […]

Read More “இறைவி” மனிதத்தின் தேவை

எம் இனத்தின் தலைவன்

உன் இனத்தில் யார் பெயரை சொன்னால் எதிரி குலை நடுங்குவானோ, அவனே உன் இனத்தின் தலைவன்.-சே குவேரா இந்த பொன்மொழிக்கு ஏற்றார் போல் திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற பெயரை சொன்னால் போதும் உலகில் உள்ள தமிழ் இனத்தின் எதிரிகள் அனைவரும் நடுங்கியே சாவார்கள். பிரபாகரன் இது ஒரு பெயர் மட்டும் இல்லை,ஒரு இனத்தின் அடையலாம். உலகம் எங்கும் வாழும் 13 கோடி தமிழர்களுக்கு இடையே பல கருத்து முரண் இருக்கும் ஆனால் பிரபாகரன் என்ற ஒற்றை […]

Read More எம் இனத்தின் தலைவன்

நான் ஒரு தமிழ்தேசியன்

சமகால அரசியல் சூழலில் தன்னை ஒரு தமிழ்தேசியன் என்று செருக்குடன் சொல்லும் உங்களை போன்ற  பலரில் நானும் ஒருவன். இந்த பாதையை நான் தொடர எது என்னை தூண்டியது, எது என்னை வழி நடத்தியது என்பது உங்களிடமும் பகிர எழுதுகிறேன். 2015 காலக்கட்டங்களில் நானும் ஒரு சராசரி இளைஞனாக முகநூலை பொழுது போக்கிற்காகவும், புலனதை(WhatsApp) கடலை போடுவதற்காகவும் பயன்படுத்தி கொண்டு இருந்தவன். ஆங்கிலம் தான் அறிவு,தமிழ் வெரும் ஒரு மொழி மட்டுமே என்ற சிந்தனையும். இஸ்லாமியர் பெரும்பாலும் […]

Read More நான் ஒரு தமிழ்தேசியன்

சீமான் என்னும் கலகக்காரன்

எங்கள் அரசியல் ஆசான் சீமான் பல மேடைகளின் கூறிய விடயம், தமிழ்நாட்டின் அரசியல் நாம் தமிழர் கட்சிக்கு முன் நாம் தமிழர் கட்சிக்கு பின் என்று தான் வரலாறு இருக்கும் என்று,அதை இன்று பலரும் உணர்ந்து இருப்பார்கள். 2009 ஈழத்தில் நடந்த இன அழிப்புக்கு பின் அண்ணன் சீமான் எடுத்த காட்டமான முடிவுகள் தான், 50 ஆண்டு வரலாறு கொண்ட கட்சிகளின் ஆணி வேரயே அசைத்து கொண்டு இருக்கிறது இன்று நாம் தமிழர் என்னும் தமிழர் படை. […]

Read More சீமான் என்னும் கலகக்காரன்

மண்ணின் காவலன் சீமான்

அது ஒரு காலம் ரஜினி என்றாலே மனித புனிதர்(நான் உட்பட அந்த மாயையில் இருந்தவன்). அவர் செய்வது எல்லாம் அற்புதம் (அவர் அப்படி எதும் செய்ததாக தெரியவில்லை) இயேசு நாதரின் மறு உருவமாகவே காணப்பட்டார். அவரை எதிர்த்து பேச கூட ஒருவரும் இருந்தது இல்லை. யாரேனும் பேசி இருந்தாலும் வெளியே வருவதும் இல்லை. ஆனால் இன்று ஒரு கூட்டம் வெறி கொண்டு எழுந்து வந்து கொண்டு இருக்கிறது, தன் இனத்தின் அரசியல் தனது அடிப்படை உரிமை அதை […]

Read More மண்ணின் காவலன் சீமான்