நான் ஒரு தமிழ்தேசியன்

சமகால அரசியல் சூழலில் தன்னை ஒரு தமிழ்தேசியன் என்று செருக்குடன் சொல்லும் உங்களை போன்ற  பலரில் நானும் ஒருவன்.

இந்த பாதையை நான் தொடர எது என்னை தூண்டியது, எது என்னை வழி நடத்தியது என்பது உங்களிடமும் பகிர எழுதுகிறேன்.

2015 காலக்கட்டங்களில் நானும் ஒரு சராசரி இளைஞனாக முகநூலை பொழுது போக்கிற்காகவும், புலனதை(WhatsApp) கடலை போடுவதற்காகவும் பயன்படுத்தி கொண்டு இருந்தவன். ஆங்கிலம் தான் அறிவு,தமிழ் வெரும் ஒரு மொழி மட்டுமே என்ற சிந்தனையும். இஸ்லாமியர் பெரும்பாலும் தீவிரவாதி, இந்தியா இந்துக்களின் நாடு என்ற அறிவையும் கொண்டு ஒரு சாதாரண திராவிட குடும்ப பின்னனியில் வாழ்ந்து வந்தேன்.

ஒரு நாள் வலையோலியில் தற்செயலாக அண்ணன் துருவன் செல்வமணி அவர்களின் காணொளியை காண நேர்ந்தது. அந்த காணொளியில் அண்ணன் துருவன் செல்வமணி திராவிட போர்வாள் ஸ்டாலினை வெளுத்து வாங்கி கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் யாரடா இவன் எங்கள் திராவிட இளவரசனை ஓரண்டை இழுப்பது என்று துருவன் அண்ணனை பற்றி தேட ஆரம்பித்தேன் அவரின் பல காணொளிகளை கண்டேன். அப்போது தான் அவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்று தெரிந்தது. சரி என்று கட்சியின் தலைவர் யார், அவர் என்ன பேசி இருக்கிறார் என்று பார்க்க தொடங்கினேன். இறுதியில் தெரிந்தது துருவனின் வால்விச்சு பேச்சுக்கு இனமான தமிழன் சீமான் தான் காரணம் என்று.தொடர்ந்து சீமானின் காணொளிகளை பார்க்க ஆரம்பித்தேன்.

என்னை போன்ற 90s பிறந்த பெரும்பாலானோர் தெரிஞ்ச அரசியல் மேடை என்பது திமுகா,அதிமுகவின் திருட்டுத்தனத்தை சொல்லும், அதிமுக, திமுகவின் பொருக்கித்தனதை சொல்லும். மாறி மாறி உண்மை பொது மேடையில் சொல்லுவார்கள் ஆனாலும் என் மக்கள் (என் குடும்பம் உட்பட) அவர்களுக்கே வாக்களிப்பார்கள்.

ஆனால் நாம் தமிழர் கட்சி மேடையில் நான் “அரசியல் தான் வாழ்வாதாரத்தின் அடிப்படை” என்ற உண்மையை உணர ஆரம்பித்தேன். இவன் இயற்கையை பற்றி பேசுகிறான், மலையை பற்றி பேசுகிறான்,விவசாயத்தை பற்றி பேசுகிறான் யாரடா இவர்கள் என்ற ஆச்சரியம் தான் வந்தது.

நான் யார் என் வரலாறு என்ன? என்ற பல கேள்விகளை எனக்குள்ளே ஏற்படுத்தினான். தினமும் நாம் தமிழர் காணொளிகளை பார்க்க ஆரம்பித்தேன், அப்போது அண்ணன் அறிவுசெல்வன் என்ற ராஜிவ்காந்தி பேச்சை கேட்க முடிந்தது. அரசியல் மேடையில் அதிகாரத்தின் தேவையை பேசினார், இந்த இந்தியா அரசியல் அமைப்பு சட்டங்களை பற்றி பேசினார். நான் ஏன் ஹிந்துவாக்காப்பட்டென், இந்த சட்டம் எனக்கு என்ன உரிமையை கொடுத்தது என்று தம்பிகளுக்கு மீண்டும் மீண்டும் கற்று கொடுத்தார். மாறு புறம் எங்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம் சைவத்தின்,வைணவத்தின் மீதான தேடலை  தூண்டினார். இவர்கள் மட்டும் இல்லை எண்ணில் அடங்கா பல சீமான்களின் பேச்சுக்களை கேட்க ஆரம்பித்தேன். பேராவூரணி திலீபன், கல்வியாளர் ஹுமாயூன்,இடும்பவனம் கார்த்திக், சாட்டை துரைமுருகன் ஆரம்பித்து அக்கா காளியம்மாள் வரை என்னை போன்ற இளைஞர்களை நாம் தமிழரின் பாதையில் வழிநடத்தி சென்றார்கள்.

முகநூலை பொழுது போக்குக்காக பயன்படுத்தி வந்த நான், ஆங்கிலம் தான் அறிவு என்று எண்ணிய நான், இந்தியா இந்துக்களின் நாடு என்று நம்பிய நான்.

தமிழில் இன்று வலைப்பதிவு(blog) செய்ய ஆரம்பித்து, தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லை என்று எழுத தொடங்கியுள்ளேன் என்றால்

நம் மூத்தவன் சீமானும், நாம் தமிழர் கட்சியும் தான் காரணம்.

– கலகக்காரன்