உன் இனத்தில் யார் பெயரை சொன்னால் எதிரி குலை நடுங்குவானோ, அவனே உன் இனத்தின் தலைவன்.
-சே குவேரா

இந்த பொன்மொழிக்கு ஏற்றார் போல் திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற பெயரை சொன்னால் போதும் உலகில் உள்ள தமிழ் இனத்தின் எதிரிகள் அனைவரும் நடுங்கியே சாவார்கள்.

பிரபாகரன் இது ஒரு பெயர் மட்டும் இல்லை,ஒரு இனத்தின் அடையலாம். உலகம் எங்கும் வாழும் 13 கோடி தமிழர்களுக்கு இடையே பல கருத்து முரண் இருக்கும் ஆனால் பிரபாகரன் என்ற ஒற்றை சொல் அவைவருக்கும் ஒன்று கூட செய்யும்.
தனது 14 வயதில் தன் இனம் படும் அவலங்களையும், சிங்களவன் செய்யும் அட்டூழிய்தை பொறுத்து கொள்ள முடியாமல் 7 பேர் கொண்ட குழுவை உருவாக்கி,அதற்கு தலைமை ஏற்று முதல் துவக்கை வாங்கினார் எம் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
தமிழினம் நிறைய போராளிகளை பார்த்துள்ளது ஆனால் ஒட்டு மொத்த இனமும் ஒரு நொடியும் யோசிக்காமல் இவனை மட்டுமே ஒரு சேர தலைவனாக ஏற்றார்கள்.
அதற்கு எம் தலைவன் செய்த தியாகங்களும், திடமான கட்டுப்பாடுகளும், தன் கொண்ட கொள்கைகள் மீதுள்ள அர்ப்பணிப்பு தான் காரணம் எனலாம்.

பிரபாகரனின் போர் தொடரும்…
– கலகக்காரன்