“இறைவி” மனிதத்தின் தேவை

நம் அனைவரும் இறைவிகளை சுற்றி தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
சொல்ல போனால்இறைவிகளால் தான் நிம்மதியாக சுற்றிக்கொண்டு வாழ்கிறோம்.

அது தாயகவோ,தாரமாகவோ,சகோதரியாகவோ, நண்பியாகவோ, சித்தியோ, அத்தையோ,பாட்டியோ இப்படி பல உறவு முறைகளில் அவர்களே நம்மை வழிநடத்தி வாழ வைத்து கொண்டு இருக்கிறார்கள்.

இன்று மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் இன்று ஒரு நாள் மட்டும் அவர்களை வாழ்த்துவதும், புகழ்வதும் சரியா!(என்னையும் சேர்த்துதான்).

உலகில் பெண்களை போற்றியும்,வாழ்த்தியும் நிறைய கதைகளும்,கவிதைகளும் உண்டு.ஆனால் தமிழ் பெண்களை போற்றியது போல ஏதும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை –  அகத்தியர்

இந்த ஒற்றை வரியில் பெண்களின் பெருமையை, அவர்களின் தேவையை இந்த உலகத்திற்கு சொன்னவன் தமிழன்.

பெண்கள் இல்லை என்றால் ஒரு ஆண் 24 மணி நேரம் கூட வாழ்ந்திட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. உன்னை ஒரு மகனாகவோ,கணவனாகவோ, தந்தையாகவோ பார்த்து பார்த்து விடிய காலை முதல் இரவு முடியும் வரை அவர்கள் உனக்கும் செய்யும் வேலைகளை எதை கொடுத்தும் ஈடு செய்ய முடியாது. அதர்க்கு பதிலாக அவர்கள் எதிர் பார்ப்பது அன்பும், சின்ன சின்ன பாராட்டுகளும் தான்.

உன் மனைவியிடம் கொழம்பு அருமையாக இருக்கிறது என்று கூறிப்பார், உன் தாயிடம் அவள் உனக்காக துவைத்த சட்டை சிறப்பாக இருக்கிறது என்ன சொல்லிப்பார் அடுத்த முறை அதைவிட சிறப்பாக செய்ய முயற்சி செய்வார்கள். இந்த பாராட்டுக்களே அவர்களுக்கு ஆஸ்கார் விருதுகள்.

இந்நாளில் முடிவெடுப்போம் தினமும் முடிந்த அளவிற்கு ஆஸ்கார் விருதுகளை கொடுப்போம். பெண்களின் தேவையை புரிந்து பெண்மையை போற்றுவோம்.

உலகின் வாழும் அனைத்து இறைவிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்.

– கலகக்காரன்.

Leave a comment