தமிழகத்தின் தலைநகரில் வடசென்னையில் வாழும் 27 வயது இளைஞன் நான்.

ஜனவரி மாதம் முதல் உலகில் இன்னொரு மூலையில் மக்கள் கொரோன என்ற கடுமையாக நோய் தொற்று ஏற்பட்டு இறக்கிறார்கள்,மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. நிறைய பேர் இறக்கிறார்கள் என்று செய்தி உல வந்து கொண்டு இருந்த போது அதை பற்றி துளியும் கவலை இல்லாது, எனக்கு அந்த நோய்க்கும் எந்த சம்மந்தம்,என் ஊருக்கு அந்த வியாதி எல்லாம் வராது என்ற திமிரிலும் சுற்றி கொண்டு இருந்தேன்.

மார்ச் மாதம் கொரோன என்ற அரக்கன் இந்தியாவிலும்,தமிழ்நாட்டிலும் வந்து வேலையை ஆரம்பித்துவிட்டான் என்று புரிய ஆரம்பித்தது. அப்போதும் கொரோன மீது பயம் ஏதும் வரவில்லை. மார்ச் 19 இரவு 8 மணிக்கு நாட்டின் பிரதமர் கொரோன பற்றி பேசினார், மக்களிடம் மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் சுய பொது உறடங்கு வலியுறுத்தினர் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை யாரும் விட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இது “janata Curfew” மத்திய அரசாலும், பிஜேபி கட்சியாலும் பெரும் வாரியாக கொண்டாடப்பட்டது.
அவர் ஏதோ ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும் பிரதமர் என்று நினைத்து கொண்டாரோ என்னவோ. என்றும் ஹிந்தி எதிலும் ஹிந்தி, என்னை போன்ற தென்னகத்தை சார்ந்த பலருக்கு அவர் பேசியது புரியாமல் தான் கேட்கிறோம். அதுவும் நல்லது தான் இல்லை என்றால் நானும் கூட 22 மார்ச் 5 மணிக்கு தெரு தெருவாக மேளம் அடித்து கொண்டு சுற்றி இருப்பேனோ என்னவோ.

மார்ச் 22 ஆரம்பித்து இந்த விடுமுறை இன்று ஏப்ரல் 2′ 12 நாட்கள் ஆகிறது. இதில் மார்ச் 23 நாள் மாநில அரசு 144 சட்டம் தமிழகத்தில் அமல் படுத்த முடிவு எடுத்தது அதன் படி 24 மார்ச் மாலை 6மணி முதல் 144 சட்டம் அமலுக்கு வரும் என்று உத்தரவு பிறபித்தது, மக்கள் விட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளிற்கு குவிந்தனர், மறு பக்கம் வேலை இல்ல காரணத்தினால் வேலை தேடி நகரத்திற்கு புலம் பெயர்த்த பெரும்பாலான இளைஞர்கள் ” மழை ஆரம்பிக்கும் போது கூடு தேடி செல்லும் காக்கை”போல தங்கள் வீடு தேடி செல்ல பேருந்து நிலையங்களுக்கு கூட்டம் கூட்டமாக சென்றனர்.

22 மார்ச் வடவை பார்த்து சிரித்த பலரும் தமிழரை முட்டாளாக எண்ணிய நிகழ்வு அது ஆனால் அதில் பெரும் வித்தியாசம் உண்டு என்பது தான் என் பார்வை.
மார்ச் 31 வரை ஊரடங்கு என்று எண்ணி ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது பிரதமரின் மற்றும் ஒரு புரியாத பொது சொற்ப்பொழிவு 24 மார்ச் இரவு. 21 நாட்கள் இந்தியா முழுவதும் நாடடங்கு உத்தரவு பிறப்பித்தார்.

21 நாட்கள் காண கிடைக்காத விடுமுறையாக சிலருக்குப்பட்டாலும், பெரும்பாலானோர்க்கு இது பெரும் அவஸ்தை மட்டுமே. ஆரம்ப காலத்தில் 8,10 என்று இருந்த கொரோன தொற்று இன்று இந்தியா முழுவதும் 2000 தாண்டி நிற்கிறது என்பது நிதர்சனம். அதுவும் தமிழகத்தில் 236 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வளவு பேருக்கு கொரோன தொற்று இருந்தாலும் இன்னும் அது சமூக பரவல் ஆகவில்லை என்று மத்திய அரசு அறிக்கை விட்டு இருக்கிறது. இந்தியா போன்று 100 கோடி தாண்டிய மக்கள் தொகை கொண்டுள்ள நாட்டில் 2000 பேருக்கு நோய் தொற்று 12 நாட்கள் என்பது குறைவு தான் என்று கொஞ்சம் பெரும் மூச்சு விட்டாலும் அதன் வீரியம் அதிகமாக இருப்பது இரு நாட்களாக காண முடிகிறது 57 பேரில் இருந்த தமிழ்நாடு, 234 பேரோடு இந்தியாவில் மூன்றாவது நோய் தொற்று உள்ள மாநிலமாக முன்னுக்கு சென்றுள்ளது.
வாங்கி வைத்த அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் தீர்ந்து விட ஆரம்பித்துவிட்டது, கடைகளில் பொருட்களின் விலை அதிகரித்து, விகிதம் குறையவும் ஆரம்பித்துவிட்டது.
ஒரு சாமனியனாக நான் அச்ச பட பெரும் காரணம் இதுவாக இருக்கும் என்று உள்ளுணர்வு சொல்ல ஆரம்பிக்கிறது.கொரோன வந்து இறக்க போகிறவரை விட உண்ண உணவில்லாமல் இறக்கும் இந்தியன் தான் அதிகமான இருப்பான் என்பது எனக்கு தோன்றுகிறது உங்களுக்கும் தோன்றலாம்.

வடநாட்டில் வீடு தேடி செல்ல பேருந்து இல்லாமல் நடந்தே செல்ல ஆரம்பித்துவிட்டான், செல்லும் தூரம் கூட தெரியாமல் இங்கிருந்து போனால் போதும் என்று கைக்குழந்தை முதல் தட்டுமுட்டு சாமான் வரை தூக்கி கொண்டு செல்கிறான், இந்த சமூக பரவல் பற்றியெல்லாம் தெரியாமல் அதை பற்றி கவலை இல்லாமல் பொந்து தேடி செல்லும் எலிகளாக ஓடுகிறான். அரசால் என்ன செய்ய முடியும் பாவம் ஏதாவது ஆயிரம் கோடிகளின் கடன் வாங்கி இருந்தால் தள்ளுபடி செய்யலாம் இல்லை அயல் நாட்டில் இருந்தால் விமானத்தில் கூட்டி வந்து சிகிச்சை கொடுக்கலாம் ஆனால் நீ கேட்பது அரசாங்கத்தின் கனவில் கூட செய்ய முடியாத பெரும் காரியம் அல்லவா.
இதன் நடுவில் உடலில் இரத்தத்திற்கு பதில் கழிவுகளால் உயிர் வாழும் இந்துத்துவ சங்கிகள் இதற்கு மத சாயம் பூசி பொய்களை பரப்ப ஆரம்பித்துவிட்டனர்.
இங்கு நிசாமுதீன் பற்றி இஸ்லாமிய கூட்டத்தை பற்றி பேசும் ஊடகம் ஈஷா நடத்திய சிவ ரத்திரியை பற்றி பேச மறுப்பது ஏனோ.

நமஸ்தே டிரம்ப் 70000 பேர் ஒன்று கூடிய நிகழ்வு அது ஜனவரி 30 இந்தியாவில் முதல் கொரோன தொற்று கண்டறிய பட்ட பிறகு நடந்த பெரும் நிகழ்வு அது.

இவைகள் எல்லாம் ஊடகம் காணது இருப்பது தான் ஊடக கொள்கைகளோ.
இன்று நாள் 2 ஏப்ரல் இன்னும் 12 நாட்கள் இருக்கிறது கையில் பணம் இல்லை, கடைகளில் பொருள் இருக்குமா என்று தெரியவில்லை சாக தான் போகிறோம் என்று தெரிந்தால் ஆவது நிம்மதியாக இருக்கும் இப்படி “வெள்ளத்தில் சிக்கிய வாத்து கொஞ்சுகள் போல நீந்தவும் முடியாமல் சாகவும் முடியாமல்” வாழும் வாழ்க்கை நரகமே.
– கலகக்காரன்