சூலை, வரலாற்றில் தமிழர்களின் கறுப்பு நாட்களை கொண்டது..
சூலைக்கு தமிழர்கள் மீது என்ன கோபமோ!
வரலாற்றில் தமிழர்கள் தனக்கான நியாயமான உரிமைகளை கேட்டு போராடிய போது,இந்த மண்ணிற்கு உரிமையற்ற மாற்று இன மக்களால் தெரு நாய்கள் போல அடித்து,எரித்து கொல்லபட்டது சூலையில் தான்..
23 ஜூலை 1983 அன்று புலிகளின் ஆரம்பகால முக்கிய தளபதியான சீலன் அவர்களின் இறப்பிற்கு பழிவாங்கும் விதமாக புலிகளால் இலங்கை இராணுவத்தினர் 13 கொல்லப்பட்டனர். அதற்கு எதிர்வினை ஆற்றுவதாக இலங்கை அரசின் சிங்கள இனவெரியர்களால் வெறியாட்டம் அவிழ்த்துவிடப்பட்டது. “சிரில் செல்வன்” என்ற அமைச்சர் தான் இதற்கு ஒரு முக்கிய காரணம்.இலங்கையின் அனைத்து நகரங்களிலும் காட்டு தீ போல பரவியது அந்த இனவெறி கலவரம். இனவெறி சிங்களவர்கள் கண்ணிற்கு தென்பட்ட தமிழர்களையும்,தமிழர்களின் கடை, வீடுகளையும் அடித்து எரித்து கொலைவெறியை காட்டினர். தொடர்ந்து 7 நாட்கள் நடந்த இந்த வெறியாட்டத்தில் தான், சிங்களவர்கள் எப்படிப்பட்ட இனவெறியர்கள் என்று தமிழர்களுக்கே சரியாக புரிய ஆரம்பித்தது..

முதல் முதலில் தன் நிலத்திலே தான் அகதியாக ஆக்கபட்டதை தமிழன் உணர்ந்த “இருண்ட காலம்” அது!!

“பாம்பிற்கு அஞ்சி தன் முட்டையை அடைகாக்கும் கோழியை” போல இனவெறி சிங்களவர்களால் தமிழர்கள் பயந்து, பயந்து தங்கள் குழந்தைகளை தூக்கி கொண்டு பாதுகாப்பை தேடி தன் தாய் நிலத்திலே ஓட தொடங்கினர்..
கிட்டதட்ட 3,000 மேற்பட்டர்கள் இதில் கொல்லப்பட்டனர்.15,000 மேற்பட்ட மக்கள் வீடுவாசல் இன்றி அகதிகளா ஆக்கபட்டனர்.25,000 பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இன்றைய மதிப்பிற்கு 2,000 கோடி ருபாய்க்கு மேல் தமிழர்களின் சொத்துகள் அழிக்கப்பட்டன. பல்லு போன கிழவன் முதல்,பால் மனம் மறவாத குழந்தை வரை இனவெறி சிங்களவர்களால் கொடூரமாக கொல்லப்பட்டனர்….

தாமிரபரணி படுகொலை
இதை விட ஒரு கொடூரமான நிகழ்வு தான் இங்கு தமிழ் நாட்டில் 23 சூலை 1999 அன்று நடந்தேறியது.. அங்காவது எதிரி சிங்களவன் தமிழர்களை கொன்றான். இங்கு துரோகி திராவிடன் தமிழர்களை ஓட ஓட விரட்டி கொன்றான்.ஆம் துரோகிகளால் 17 தமிழர்கள் கொல்லப்பட்ட கறுப்பு நாள் தான் 23 சூலை 1999.
திருநெல்வேலி மாவட்டத்தில், மாஞ்சோலை எஸ்டேட்டில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான நியாமாக கோரிக்கைகளை பிபிடிசி நிறுவனத்திடம் வைத்தனர். அதில் முக்கியமானவை 30 ரூபாய் கூலி உயர்வு. அதை தவிர்த்த மற்ற அனைத்து கோரிக்கைகளும் ஒரு அடிப்படை உரிமையும்,தேவையுமே.பெண்கள் பணியில் இருக்கும் போது மகப்பேறு காலங்களில் விடுப்பு, மாதவிடாய் பெண்களுக்கு விடுமுரை, எட்டு மணி நேர வேலை மற்றும் பல மாதங்களாக நடந்துவரும் இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 653 தொழிலாளர்களின் விடுதலை ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் வலுப்பெற்றது. இதில் பலரும் பேச விரும்பாத,பேச மறுத்த விடயம் இந்த போராட்டம் நடந்த காலம் தமிழர்களின் உறைவிடம் என்று மார்தட்டிக்கொள்ளும் திமுகவின் ஆட்சி காலம் தான்..

தமிழர்களின் தலைவன் என்று தன்னை தானே அழைத்துக்கொள்ளும் திராவிடர் கருணாநிதி 1996 சட்டமன்ற தேர்தலில் தான் அடைந்த மாபெரும் வெற்றியால் மமதையில் இருந்தார் என்றே கூற வேண்டும்.வெறும் 30 ரூபாய் கூலி உயர்வும், தனிமனிதனுக்கு அடிப்படை உரிமைகளையும் கேட்டு போராடிய மக்களை என்ன ஏது என்று கூட கேட்டறியாமல். ஆளும் அரசு பெரும் முதலாளிகளுக்கு சார்பாக முடிவெடுத்து 17 தமிழர்களை கொன்று விட்டது. அதிலும் 2 பெண்கள்,ஒன்றரை வயதுடைய குழந்தை விக்குனேசு கொல்லப்பட்டனர்.

தங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசிற்கு தெரிவிக்க தாமிரபரணி ஆற்றங்கையில் பேரணியை துடங்கி, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை கொடுக்க சென்றனர்.ஆட்சியர் அலுவலகம் அடைந்த அவர்களை பெரும் காவல் படை வரவேற்க காத்திருந்தது. ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதில் தொழிலாளர்களுக்கும், ஆளும் வர்கதினருக்கும் மோதல் உருவானது. காவல்துறையினர் தடியடி,துப்பாக்கி சூடு என்று தங்களுக்கே உண்டான வன்முறையை ஆரம்பித்தனர். ஆளும் வர்க்கத்தின் காட்டுமிராண்டி தனத்தை எதிக்கொள்ள முடியாத மக்கள்,நிலைகுலைந்து ஓட அறிவித்தனர். ஆட்சியர் அலுவகத்தில் ஒரு பகுதியில் உள்ள சுவற்றை தாண்டி ஓட ஆரம்பித்தனர்,சுவற்றை தாண்டி சென்றால் தாமிர பரணி ஆறு, ஆற்றில் குதித்து தப்பித்து விடலாம் என்று ஓட ஆரம்பித்த மக்களுக்கு கற்களை கொண்டு தாக்க ஆரம்பித்தனர் அந்த சமூகநீதி காத்த தலைவனின் காவல் துறை. பட்சிளம் குழந்தை உட்பட 17 உயிர் கொல்லப்பட்டது.வழக்கம் போல மக்கள் தாங்களே போய் இறந்துவிட்டார்கள் என்று சட்டம் தீர்ப்பை சொன்னது. இன்றும் அந்த 17 உயிர் தங்களுக்காக நீதியை கேட்டுக்கொண்டு தான் உள்ளது ஆனால் நமக்கு தான் அது கேட்பதில்லை..
இந்த இரு பெரும் வரலாற்று நிகழ்வுகளும் தமிழர்கள் நிலை என்ன என்பதை பலருக்கு உணர்த்தியது. இன்றும் என்னை போன்றோருக்கு உணர்த்திகொண்டு உள்ளது.
என் இன தமிழ் சொந்தங்களே,வரலாற்றை படைக்க வரலாற்றை படியுங்கள்.தமிழன் யார் என்று கேட்கபடும் இந்த நிகழ்கால சூழலில் கூட நீ மாறவில்லை என்றால் இன்னொரு தாமிரபரணி படுகொலை,இன்னொரு கறுப்பு சூலை நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்தேறும் என்பதை மறவாதே!
தமிழ்தேசிய தலைவர் வழிநடத்திய தமிழர் அரம் சார்ந்த அரசியலை தமிழர் நிலத்தில் படைக்க முயற்சியை எடுப்போம்.

சாதிமத அரசியலை விட்டு,இனத்தால் ஒன்றிணைவோம்.
சினிமா மோகம் விடுத்து,அரசியல் புரட்சியில் உன் பணியை தொடங்கு..
- கலகக்காரன்



