எங்கள் அரசியல் ஆசான் சீமான் பல மேடைகளின் கூறிய விடயம், தமிழ்நாட்டின் அரசியல் நாம் தமிழர் கட்சிக்கு முன் நாம் தமிழர் கட்சிக்கு பின் என்று தான் வரலாறு இருக்கும் என்று,அதை இன்று பலரும் உணர்ந்து இருப்பார்கள்.

2009 ஈழத்தில் நடந்த இன அழிப்புக்கு பின் அண்ணன் சீமான் எடுத்த காட்டமான முடிவுகள் தான், 50 ஆண்டு வரலாறு கொண்ட கட்சிகளின் ஆணி வேரயே அசைத்து கொண்டு இருக்கிறது இன்று நாம் தமிழர் என்னும் தமிழர் படை.

“கலகம் பிறந்தால் வழி பிறக்கும்”
என்பார்கள்.
அதை போல் அண்ணன் சீமான் 2009 பிறகு தமிழ்நாட்டு அரசியலில்,ஆட்சியாளர்களின் முடிவுகளில்,அரசாங்கத்தின் கொள்கைகளின் தொடர்ந்து கேள்விகளையும், அவர்கள் செய்யும் தவறுகளையும் மக்களின் முன்னாள் எடுத்துரைத்து வருகிறார்.
இது தான் இங்கு அண்ணாவின் வழிகாட்டுதலில், பெரியாரின் கொள்கைகளில் பிறந்த திராவிட கட்சிகளின் அடிநாததை இன்று அசைத்துள்ளது.
தாங்கள் தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர், தங்கள் கட்சி தான் என்றும் தமிழ்நாட்டின் அரசியல் சூழலை முடிவெடுக்கும் என்று எண்ணி கொண்டு இருந்த திமுக, அதிமுக. இன்று நடிகர் வடிவேலு ஒரு படத்தில் ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவது போல் இரண்டு கட்சிகளும் எங்கள் மூத்தவன் சீமானை தனியாக எதிர்க்க திரானி இல்லாமல் அவர்கள் சித்தாந்தங்களுக்கு எதிரியாக இருந்தாலும் சரி, அவர்கள் ஒழித்து விட்டதாக கூறிய சாதிய கட்சிகளாக இருந்தாலும் சரி ஆட்டோவில் ஏற்றி கொண்டு இருக்கிறது.
திராவிடம் யாரெல்லாம் அரசியல் பேசலாம், எங்கெல்லாம் அரசியல் பேசலாம் என்று வகுத்து வைத்திருந்த கோட்பாடுகளை உடைத்து. எங்கும் அரசியல், எதிலும் அரசியல் உள்ளது என்ற புரிதலை பள்ளி சிறார்களில் இருந்து பல்லு கொட்டிய கிழவன் வரைக்கும் அரசியலின் தேவையை எங்கள் அண்ணன் சீமான் தான் புரிய வைத்துள்ளார்.
கலகம் தொடரும்.
– கலகக்காரன்