மண்ணின் காவலன் சீமான்

அண்ணன் சீமான்

அது ஒரு காலம் ரஜினி என்றாலே மனித புனிதர்(நான் உட்பட அந்த மாயையில் இருந்தவன்). அவர் செய்வது எல்லாம் அற்புதம் (அவர் அப்படி எதும் செய்ததாக தெரியவில்லை) இயேசு நாதரின் மறு உருவமாகவே காணப்பட்டார். அவரை எதிர்த்து பேச கூட ஒருவரும் இருந்தது இல்லை. யாரேனும் பேசி இருந்தாலும் வெளியே வருவதும் இல்லை.

ஆனால் இன்று ஒரு கூட்டம் வெறி கொண்டு எழுந்து வந்து கொண்டு இருக்கிறது, தன் இனத்தின் அரசியல் தனது அடிப்படை உரிமை அதை எந்த கன்னட கூத்தாடிகும் விட்டு கொடுக்க முடியாது என்றும் அவனின் வண்டவளங்களை தண்டவாளம் ஏற்றி அடித்து கொண்டு இருக்கிறது.

இதற்கு எல்லாம் அடித்தளம் இட்டவன் சீமான் என்னும் எங்கள் மூத்தவன், எங்கள் அரசியல் ஆசான். மொழி என்றால் என்ன இயற்கை ஏன் பாதுக்காக்க வேண்டும், நம் கலாச்சாரம் யாரால் அழிக்க படுகிறது, நாம் ஹிந்துக்களா இல்லையா இப்படி பல விடயங்களில் அனைவருக்கிடயே கேள்வியை உருவாக்கியவன்.

இன்று திராவிடமும்,ஹிந்துத்துவாவும் தமிழ்நாட்டின் தெருக்களில் சின்னசிரு எளிய பிள்ளைகளால் பந்தாட படுகிறது.

இனி சீமானே வேண்டாம் என்றாலும் இது நிற்காது. அரசியல் அடுத்த தலைமுறையினர் கைகளில் அவன் கொடுத்துவிட்டான்.

எங்கள் பெரும் பாட்டன் இராவணன் தோற்று இருக்கலாம், எங்கள் தேசிய தலைவர் விழ்த்த பட்டிருக்கலம். ஆனால் அவர்களிடம் இல்லாத ஒன்று இன்று எங்களிடம் அதிகமாக இருக்கிறது “வன்மம்”.

இனி நீங்கள் ஆற்றும் வினைகளுக்கு எதிர்வினை வந்தே தீரும்.

– கலகக்காரன்.